தகவல் அறியும் சட்டத்தில் விண்ணப்பம்,
1. எழுத்து மூலமாக இருக்க வேண்டும்.
2. விண்ணப்பத்தினை பதிவஞ்சல் மூலமாக அனுப்புங்கள். நகல், தபால் மூலம் அனுப்பிய இரசீது ஒப்புகை அட்டை பாதுகாப்பாக வைத்திருங்கள்.
அல்லது நேரில் கொடுத்தால் ஒப்புகை வாங்குங்கள்.
3. மாநில அரசு துறைகளுக்கு விண்ணப்பத்துடன் ரூ10/ - நீதிமன்ற ஒட்டுவில்லை ( COURT FEE STAMP -நீதிமன்ற வளாகங்கள் தாசில்தார் அலுவலகங்களுக்கு பக்கத்தில் பெட்டிக்கடைகளில். முத்திரைத் தாள் விற்பனையாளர்களிடம் கிடைக்கின்றது). மத்திய அரசுக்கு ரூ10/- க்கு கேட்பு வரைவோலையாக செலுத்தப்படவேண்டும். ஸ்டேட் பேங்க் கடன் அட்டைகள் மூலமாக இணையத்திலும் செலுத்தலாம்.
விண்ணப்பம் பெற்ற நாளிலிருந்து 30 நாட்களுக்குள் பொதுத் தகவல் அலுவலர் பதில் அளிக்கவிட்டால் அல்லது விண்ணப்பம் வேறு ஏதாவது காரணத்திற்காக நிராகரிக்கப்பட்டால் தமிழ்நாட்டினை பொருத்த வரை முதுநிலை பொதுத் தகவல் அலுவலரிடம் முதல் மேல்முறையீடும் தமிழ்நாடு தகவல் ஆணையத்திடம் இரண்டாவது மேல் முறையீடும் செய்யப்படவேண்டும். தனி மனித சுதந்திரம் மற்றும் உயிருக்கு ஆபத்து உள்ள சூழ்நிலைகளில் 48 மணி நேரத்தில் தகவல் தர வேண்டும். காவல் துறை ஒரு நப்ரினை கைது செய்தால் அந்த நபர் மேல் உள்ள வழக்கு பற்றி தகவல் அறியும் உரிமைச் சட்டப்படி 48 மணி நேரத்திற்குள் தகவல் தர வேண்டும்.
காவல் துறையைப் பொருத்த வரை மாவட்ட காவல்துறைக் கண்காணிப்பாளர் அல்லது காவல்துறை ஆணையாளர்கள் பொதுத் தகவல் அலுவலர்களாக உள்ளனர்.
மாவட்டத்தில் வருவாய் துறையைப் பொருத்த வரை மாவட்டஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது), பொதுத் தகவல் அலுவலராகவும் மாவட்ட வருவாய் அலுவலர் முதல் மேல் முறையீட்டு நீதிமன்றமாகவும் தமிழ்நாடு தகவல் ஆணையம் இரண்டாவது மேல்முறையீட்டு நீதிமன்றமாகவும் இருக்கும்.
தகவல் உரிமைச் சட்டத்தின் கீழ் நீங்கள்,
1. ஆவணங்களை பார்வையிடலாம். முதல் ஒரு மணி நேரத்திற்கு கட்டணம் கிடையாது
2. ஆவணங்களை நகல் எடுக்கலாம். பக்கதிற்கு இரண்டு ரூபாய் அல்லது உண்மையாக ஆகின்ற செலவு
3. சான்றிட்ட நகல்கள் வழங்கப்படவேண்டும்.
4. மின்ணனு சேமிப்பு வடிவில் உள்ள ஆவணங்களை நீங்கள் அதே வடிவில் நகல் பெறலாம். அதாவது சி.டிப் பதிவுகள் போன்றவற்றின் நகல்களைப் பெறலாம்.
பொது மக்களுக்கு தகவல் உரிமைச் சட்டத்தின் கீழ் எந்த துறையில் தகவல் கேட்க வேண்டும் என்ற குழப்பம் இருக்கின்றது. தமிழ்நாடு மாநில அரசு பலதுறைகளின் பொதுத் தகவல் அலுவலர்கள் மேல்முறியீட்டு அலுவலர்கள் பட்டியலை இணையத்தில் வெளியிட்டுள்ளது. மத்திய அரசு அனேகமாக குடிநீர்,சாக்கடை தெருவிளக்கு போன்றவை உள்ளாட்சி அமைப்புகளின் கீழ் வருகின்றது.
தகவல் அறியும் உரிமைச் சட்டப்படி அரசு துறைகள் தங்களது அலுவலர்களின் அதிகாரங்கள், கடமைகள் துறைகளுக்கு ஒதுக்கப்படும் நிதிகள் அதாவது துறை பற்றிய அனைத்து தகவல்களையும் பொதுமக்கள் அறியும் படி தெரிவிக்க வேண்டும் . மக்களிடம் இருந்து பெறப்படும் விண்ணப்பங்கள் கோப்புகள் அட்டவனைப்படுத்தப்பட்டு பராமரிக்கப்பட வேண்டும்.
இந்தக் கடமையை செய்தாலே பாதி விண்ணப்பங்கள் குறைந்து விடும்.
தமிழ்நாடு அரசு இணையத்தில் தமிழில் வெளியிட்டுள்ள கையேடு:
http://www.tn.gov.in/rti/proactive/guidebook_rtiact.pdf
மத்திய அரசு இணைய தளத்தில் நீங்கள் தகவல் உரிமைச் சட்டப்படி விண்ணப்பிக்கலாம்
www.rtionline.gov.in
மத்திய அரசின் தகவல் உரிமைச் சட்டக் கையேடு ஆங்கில பி.டி.எப் கோப்பு வடிவில்
http://rti.gov.in/RTICorner/Guide_2013-issue.pdf
தகவல் அறியும் உரிமைச் சட்டம் ஆங்கிலத்தில் பி.டி.எப் வடிவில்
http://rti.gov.in/rti-act.pdf